தர்பூசணி பழத்தில்  கலப்படம் இல்லை தோட்டக்கலைத்துறையினர் பிரசாரம்

ராமநாதபுரம்: தக்காளி, சிவப்பு கொய்யா போன்று தர்பூசணி பழத்திலும்இயற்கையாவேசிவப்பு நிறம் உள்ளதால் தயக்கமின்றி சாப்பிடலாம் என தோட்டக்கலைத்துறையினர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

ராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஆறுமுகம் கூறியிருப்பதாவது:

தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக உண்மைக்கு முரணான செய்தி பரவியது. இதையடுத்து தர்பூசணி அதிகம் விளையும் மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து ரசாயன ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதில் தர்பூசணி பழத்தில் சுவைக்காக செயற்கை ரசாயனம் கலப்படம் இல்லை என தெரிய வந்துள்ளது.

தக்காளி, திராட்சை, சிவப்பு கொய்யா போன்றவை போலவே இயற்கையாகவே தர்பூசணி பழத்தில் லைகோபீன் எனப்படும் இயற்கை மூலப்பொருள் உள்ளது.

தர்பூசணியில் நீர்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, சி, பி1, பி6 போன்ற நுண்ணுாட்ட சத்துகள், பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன.

எனவே மக்கள் தயக்கமின்றி தர்பூசணி பழங்களை சாப்பிடலாம்.

இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.

Advertisement