டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் பலி

கமுதி: கமுதி அருகே நீ.வேப்பங்குளத்தைச் சேர்ந்த பாண்டியராசு 68, அவரது உறவினர் முருகேசன் 54, டூவீலரில் கிளாமரத்தில் இருந்து நீ.வேப்பங்குளத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கிளாமரம் செக் போஸ்ட் அருகே அருப்புக்கோட்டையில் இருந்து முதுகுளத்துாருக்கு ஜல்லிக்கற்கள் கொண்டு சென்ற லாரி டூவீலர் மீது மோதியது.

இதில் பாண்டியராசு தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்தில் இறந்தார்.முருகேசன் பலத்த காயத்துடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கமுதி இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன் லாரி டிரைவர் பொதிகுளத்தைச் சேர்ந்த சாமிதாஸ் மீது வழக்குபதிந்து விசாரிக்கிறார்.

Advertisement