மணல் கொள்ளையன்  குண்டாசில் கைது

ராமநாதபுரம்: -நயினார்கோவில் பகுதி யில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

பரமக்குடி தாலுகா கள்ளியடியேந்தல் பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் கருணாகரன் என்ற சேதுபதி 32. இவர் ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக நயினார்கோவில் போலீசார் கைது செய்து ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இவர் பல்வேறு மணல் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சந்தீஷ் எஸ்.பி., கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோனுக்கு பரிந்துரை செய்தார்.

கலெக்டர் உத்தரவின் பேரில் கருணாகரன் என்ற சேதுபதியை குண்டர் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement