கோடை விடுமுறை காலத்தில் மாணவருக்கு பயிற்சி பட்டறை

ராமநாதபுரம்: கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாக்கும் வகையில்மாவட்ட நிர்வாகத்தால் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மே 6 முதல் 8 வரை ராமநாதபுரம் மதுரை ரோட்டில் உள்ள புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மே 12 முதல் 14 வரை பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.

இப்பயிற்சி பட்டறையில் கதை சொல்லுதல், நாடகம், ஓவியம், ஆங்கில எழுத்துப் பயிற்சி, பேச்சுக்கலை, காகிதம் மற்றும் ஓலை மடிப்பு ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Advertisement