சாலையை மறைக்கும் மரங்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பேரூராட்சியில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

இப்பேரூராட்சிக்கு தெற்கே பெரியாறு கால்வாயை ஒட்டி செல்லும் தார் சாலை சமீபத்தில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. வேட்டையன்பட்டியில் இருந்து அரசினம்பட்டி வரை நகருக்குள் வராமலேயே டூவீலர், கார்கள் செல்லும் அளவிற்கு இச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் ரோட்டின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து வானங்கள் செல்ல முடியாத அளவிற்கு உள்ளது.நகருக்கு புறவழிச்சாலையாக பயன்படும் இக்கால்வாய் சாலையை சீரமைத்து சீமைக்கருவேல மரங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement