வீணாகும் கட்டுமான பொருட்கள் பராமரிப்பில்லாத ஒன்றிய அலுவலகம்

காரைக்குடி: கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குப்பை சாக்கடை நிறைந்து சுகாதாரக் கேடு நிலவுவதோடு, போதிய பாதுகாப்பின்றி கட்டுமான பொருட்கள் வீணாகி வருகிறது.
கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகள் உள்ளன. இதில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். ஊராட்சிகள் தோறும், நோய்களை தடுக்க பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முறையான பராமரிப்பின்றி சுகாதார சீர்கேட்டில் தவிக்கிறது.
அலுவலகத்தின் பின்புறத்தில் சாக்கடையும், குப்பையும் நிறைந்து காணப்படுவதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது. தவிர கட்டுமான பொருட்கள் பாதுகாப்பின்றி வெயிலிலும் மழையிலும் வீணாகி வருகிறது. பொருட்கள் வைத்து பாதுகாக்கும் அறையின் கதவும், உடைந்து பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
Advertisement
Advertisement