பூலாங்குறிச்சி மலையடிவார ரோடு புதுப்பிக்க கோரிக்கை

பூலாங்குறிச்சி: பூலாங்குறிச்சி மலையடிவாரத்தில் முழுமையாக ரோடு அமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.

திருப்புத்துார் ஒன்றியம் பூலாங்குறிச்சியில் மலைத் தொடர் உள்ளது. அதன் அடிவாரத்தில் தார் ரோடு உள்ளது. மலைத்தொடரில் உள்ள கோயில், சமணப்படுகை,சின்னங்கள்,சிவன்கோயில் மற்றும் சிங்காரவேலர் கோயில்களுக்கு செல்ல இந்த ரோட்டை கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

அதில் பகுதி ரோடு புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் டூ வீலர்களில் செல்ல பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். அந்த ரோட்டை முழுமையாக புதுப்பித்து நகரின் முக்கிய ரோட்டுடன் இணைக்க கோரியுள்ளனர்.

Advertisement