காஷ்மீர் வரலாறு இதுதான்: கதை அளந்த டிரம்ப்

20

வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்னை குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ''அது கிட்டத்தட்ட 1,000 முதல் 1,500 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை. உலகிலேயே நீண்ட காலமாக இருக்கும் விவகாரங்களில் ஒன்று,'' என, வரலாறு தெரியாமல் பேசியுள்ளார்.


பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப்பும் இதேபோல், பேட்டி அளித்துள்ளார், அவர் கூறுகையில், ''இது பல நுாற்றாண்டுகளாக இருக்கும் பிரச்னை. 1500 ஆண்டுகளாக அந்த பகுதியில் எல்லைப் பிரச்னை உள்ளது,'' என கூறியுள்ளார். இவர் கூறியதையே டிரம்பும் வழிமொழிந்துள்ளார்.


ஆனால், 'இது அதிகபட்சம் 78 ஆண்டு பிரச்னை தான். குறிப்பாக, 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் தான் காஷ்மீர் பிரச்னை தோன்றியது. அதற்கு முன் பாகிஸ்தானே கிடையாது. இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவாக்கப்பட்டபோது, காஷ்மீர் மன்னர் ஹரிசிங்குக்கு எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்பதில் சிறிய குழப்பம் ஏற்பட்டது. அதற்குள் பாகிஸ்தான் அவரை மிரட்ட பயங்கரவாதிகளுடன் படையை ஏவியது. இதையடுத்து, இந்தியாவின் உதவியை நாடிய ஹரிசிங் அதே ஆண்டு அக்டோபரில் இந்தியாவுடன், காஷ்மீரை இணைத்துக் கொண்டார்' என கூறுகின்றனர், வரலாற்று அறிஞர்கள்.

Advertisement