ஆர்ப்பாட்டம் ..

மதுரை: வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே மதுரை ஆட்டோமொபைல் டிரேடர்ஸ் கன்சல்டன்ஸ் அசோசியேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். செயலாளர் காஜா மைதீன், பொருளாளர் சுகுமாறன் முன்னிலை வகித்தனர்.

நிர்வாக ஆவண பணி விரைவுபடுத்த வேண்டும். டிரேடர் லைசென்ஸ் முறை எளிமைப்படுத்த வேண்டும். மோட்டார் வாகன சட்டம் 1989 விதி 430ன் கீழ் ஆர்சி புக் கையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். நிர்வாகிகள் சரவணராஜ், வேல் வாசகம், குணா, வினோத் பங்கேற்றனர்.

Advertisement