முளைப்பாரி ஊர்வலம்

மேலுார்: வெள்ளலுார் கற்பக விநாயகர், கருங்கல் மந்தை கருப்பண சுவாமி கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏப். 22 முதல் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்தனர்.

நேற்று கோயிலில் இருந்து கிளம்பிய பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சித்திரைப்பூ கண்மாயில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வயலில் விளைந்த அரிசி, பாசிப்பயறு, தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து தயாரித்த கொழுக்கட்டைகளை உறவினர்களுக்கு கொடுத்து திருவிழாவிற்கு வரவேற்று விருந்தோம்பல் செய்தனர்.

Advertisement