தினமலர் செய்தியால் தீர்வு

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 27 ஊராட்சிகளுக்கு துாய்மை பாரத திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பையை அகற்ற தலா ரூ. 2.80 லட்சம் மதிப்பீட்டில் 65 மின்கல ஆட்டோக்கள் ஒதுக்கப்பட்டன.

இதை அதிகாரிகள் ஆய்வு செய்ய காலம் தாழ்த்தியதால் ஒன்றிய அலுவலகத்தில் நீண்ட நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பி.டி.ஓ.(கி.ஊ.,) சங்கர் கைலாசம் உத்தரவுபடி குப்பையை அகற்ற 65 ஆட்டோக்கள் அந்தந்த ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டன.

Advertisement