ஏறுதழுவிய வீரர் பலி

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் இயற்கை விவசாயிகள் மற்றும் நாட்டு மாடு வளர்ப்போர் கூட்டமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு நடந்தது.

திருமங்கலம் ஆர்.டி.ஓ., சிவஜோதி துவக்கி வைத்தார். 770 காளைகள், 450 வீரர்கள் களம் கண்டனர். வெற்றிபெற்ற காளை, வீரர்களுக்கு சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில் காயமடைந்த 33 பேரில் 6 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்ற மாடுபிடி வீரர் வலையங்குளம் கண்ணன் மகன் அய்யனார் 20, பலியானார்.

Advertisement