மாட்டுத்தாவணி வாகன காப்பகத்தில் 'போலி' பில் கலெக்டர்கள் வசூல் 2 'ஒரிஜினல்களை' சஸ்பெண்ட் செய்தார் கமிஷனர்
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் இருசக்கர வாகன காப்பகத்தில் ஆள் மாறாட்டம் செய்து கட்டண வசூல் செய்யப்பட்ட சம்பவத்தில் மாநகராட்சி பில் கலெக்டர்கள் 2 பேரை கமிஷனர் சித்ரா 'சஸ்பெண்ட்' செய்தார்.
மாநகராட்சி பகுதியில் இருசக்கர வாகன காப்பகங்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இனங்கள் ஏலம் விடப்படாததால் அங்கு 'இலாகா வசூல்' என்ற பெயரில் மாநகராட்சியே கட்டணம் வசூலிக்கிறது. இதில் அந்தந்த பகுதி ஆளுங்கட்சி பிரமுகர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கூட்டு சேர்ந்து கட்டண கொள்ளையில், அதாவது மாநகராட்சி நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்து பங்கிட்டு கொள்வதாக சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக கமிஷனர் ஆய்வு செய்ததில் வாகனங்கள் வெளியேறும் போது வசூலிக்கும் கூடுதல் கட்டணங்களுக்கு உரிய ரசீது கொடுக்கப்படவில்லை எனத் தெரிந்தது. இதையடுத்து வாகன நுழைவு, வெளியேறும் பகுதியில் மாநகராட்சி பில் கலெக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பாக வெளியேறும் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு பி.ஓ.எஸ்., (பாயின்ட் ஆப் சேல்) மூலம் ரசீது வழங்கும் நடைமுறையை கமிஷனர் அமல்படுத்தினார். இதன் மூலம் மாநகராட்சிக்கான வருவாய் இழப்பு தடுக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் இரவு மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்த கமிஷனர் சித்ரா, திடீரென வாகன காப்பகத்தில் ஆய்வு செய்தார். அப்போது பில் கலெக்டர்கள் பாஸ்கரன், ராமநாதனுக்கு பதில் வேறு சிலர் இருந்தனர். அவர்கள் ரசீது கொடுக்காமல் பணம் வசூலித்தது தெரிந்தது. இதையடுத்து பில் கலெக்டர்கள் இருவரையும் கமிஷனர் 'சஸ்பெண்ட்' செய்தார்.
மேலும்
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு