பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு எங்கும் தாராளம்: கண்காணிப்பில் தொடரும் அலட்சியம்

அபரிமிதமான பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

பெய்யும் மழை நீர் நிலத்திற்குள் இறங்குவதை தடுத்து நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது .

ஆறு, ஓடை, கால்வாய் என நீர் நிலைகளில் மலைபோல் குவிந்து நீர் நிலைகள் பாதிக்கிறது. இதை குப்பையுடன் எரிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரிக்கிறது.

நிலம், நீர், காற்று என சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதனால் 2019 முதல், பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்தது.

பொதுமக்கள், மஞ்சள் பை,எளிதில் மக்கும் பாக்கு மட்டை தட்டுக்கள், வாழை இலை, சில்வர் பாத்திரங்கள், கண்ணாடி டம்ளர்கள், பேப்பர் ஸ்ட்ரா, துணி, சணல், காகிதப்பை, பீங்கான் கப், தட்டுக்கள், மண் பானைகள், கரும்பு சக்கை, மூங்கில், தேங்காய் சிரட்டை ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை செய்யப்பட்டால், 10 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

நிறுவனங்கள், கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இதை நகர பகுதிகள், ஊரக பகுதிகளில் அதிகாரிகள் கண்காணித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் முறையான கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.

பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அதிகளவு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடைகளிலும், தடை, அபராதம் குறித்து கண்டு கொள்ளாமல் அதிகளவு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களிடமும் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இனியாவது இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement