குள்ளஞ்சாவடியில் போலீசை கண்டித்து பா.ம.க.,வினர் சாலை மறியல்

குள்ளஞ்சாவடி : போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கூறி, குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையம் முன்பு பா.ம.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை பகுதியில் கடந்த 24ம் தேதி இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக, 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட தரப்பினரை போலீசார் கைது செய்ததாக கூறி, பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் நேற்று காலை 10:00 மணியளவில் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிடுமாறும், போலீசாரை அவர்கள் வற்புறுத்தியதோடு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் கடலூர்-விருத்தாச்சலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி சமரசம் செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனத்தை போலீஸ் ஸ்டேஷன் முன்பு நிறுத்தி இருந்தனர்.

சாலை மறியல் தொடர்பாக அந்தப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Advertisement