50 கிலோ இரும்பு திருட்டு இரண்டு பேர் கைது

கடலுார், : கடலுார் ரெட்டிச்சாவடி அருகே தனியார் கம்பெனியிலிருநந்து 50 கிலோ எடையுள்ள இரும்பை திருடிச்சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பேட்ரிக்,47, என்பவர் பாதுகாப்பு அதிகாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 8:45 மணிக்கு, அடையாளம் தெரிந்த மூன்று நபர்கள் கம்பெனியிலிருந்து 50 கிலோ எடையுள்ள இரும்பை திருடிச்சென்றதை பார்த்தார். அவர்களை இரண்டு பேரை விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தார். ஒருவர் தப்பியோடிவிட்டார்.

புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிந்தனர். போலீஸ் விசாரணையில், இரும்பை திருடியது புதுச்சேரி பெருங்களூருவை சேர்ந்த வேலாயுதம்,21, மற்றும் 14வயது சிறுவன் என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

Advertisement