ஆண்டிபட்டியில் ஆடுகள் கோழி, புறாக்கள் திருட்டு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி குமாரபுரத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் 51, கொண்டமநாயக்கன்பட்டி - வெண்டி நாயக்கன்பட்டி ரோட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகள், கோழிகள், புறாக்கள், வாத்துக்கள் வளர்த்து வருகிறார்.

ஏப்ரல் 27ல் வளர்ப்பு பிராணிகளை அதற்குரிய கொட்டத்தில் அடைத்து விட்டு வெளியூர் சென்று விட்டார்.

மறுநாள் சென்று பார்த்தபோது தோட்டத்தில் கொட்டத்தின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

அதில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான இரு ஆடுகள், 15 கோழிகள், 10 புறாக்கள், 4 வாத்துக்கள் திருடு போய் இருந்தது. மணிவண்ணன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement