துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை
கம்பம்: 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சர்க்கரை, ரத்த அழுத்தம் பார்க்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என துப்பரவு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் கடந்தாண்டு மே 18 ல் நடந்தது. அந்த முகாம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்றது.முகாமில் துாய்மை பணியாளர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், உயரம், எடை, இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேல் சிகிச்சைக்கான பரிந்துரைகளும் செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடத்தப்பட்டது. மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு மருந்துவ காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டது. சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பதிவு செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்தாண்டிற்கான முகாம் இன்னமும் நடைபெறவில்லை. ஊராட்சி,பேரூராட்சி , நகராட்சிகளிலும் துப்பரவு பணியாளர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!