ரெட்டிச்சாவடி அருகே 2 வீடுகளில் நகை, பணம் துணிகர திருட்டு
கடலுார் : கடலுார் அருகே இரண்டு வீடுகளில் ரூ. 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், ரெட்டிச்சாவடி அடுத்த மேல்அழிஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், 49. இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் குடும்பத்தினருடன் துாங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவிலிருந்த ஒரு சவரன் தங்க நகை மற்றும் 17ஆயிரம் ரொக்கத்தை திருடினர்.
தொடர்ந்து பக்கத்து வீடான திருஞானசம்பந்தம் என்பவரது வீட்டின் பின்பக்க கதவை திறந்து 2 கிராம் மோதிரம், 1,500 ரூபாய் ரொக்கத்தை திருடிச்சென்றனர். நேற்று காலை வீட்டில் இருந்தவர்கள் எழுந்து பார்த்த போது, பீரோ மற்றும் சூட்கேசில் இருந்து நகை, பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து வீடு புகுந்து திருடியவர்களை தேடி வருகின்றனர்.
மேலும்
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு