தேசிய நெடுஞ்சாலை ஓரம் சிமென்ட் கல் தயாரிப்பு - வெளியேறும் துாசியால் சிரமம்

கூடலுார்: கூடலுார் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சிமென்ட் கல் தயாரிப்பு நிறுவனம் உள்ளதால் அங்கிருந்து வெளியேறும் தூசி வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
கூடலுார் லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சிமென்ட் கல் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.
இப்பகுதியில் தினந்தோறும் லாரிகள் மூலம் ஜல்லிக்கற்கள், சிமெண்ட் கொட்டப்படுவதால் அங்கிருந்து புகைமண்டலம் போல் தூசி வெளியேறி நெடுஞ்சாலையில் பரவுகிறது.
தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருப்பதால் வாகன போக்குவரத்து அதிகம். தற்போது கோடை விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் அதிகம் செல்கின்றன. இப்பகுதியில் பரவும் தூசியால் வாகன ஓட்டிகளை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
மேலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதனால் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு தூசி பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு