100 நாள் வேலைத் திட்டம்; தமிழகத்திற்கு ரூ.2,999 கோடியை விடுவித்தது மத்திய அரசு

சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்திற்கான ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்தது.
கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்த, 100 நாள் வேலை அளிக்கும் திட்டத்தை, 2005ல் அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில், 2008 - 09ம் ஆண்டில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு, 5 கி.மீ., சுற்றளவுக்குள், ஓராண்டில் 100 நாட்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
நாடு முழுதும், 740 மாவட்டங்களில், 13.42 கோடி பேர் பயனாளிகளாக உள்ளனர். இந்த திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு, 4,034 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்காமல் நிறுத்தி வைத்து உள்ளது என தமிழக அரசு குற்றம் சாட்டி இருந்தது. இதற்கு தி.மு.க., எம்.பி.,க்கள் பார்லிமென்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஆர்ப்பாட்டமும் நடந்துது.
இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்திற்கான ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்தது. இந்த திட்டத்தில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ரூ.2,999 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.


















மேலும்
-
வான்வெளியை மூடியது பாகிஸ்தான்: ஆண்டுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு!
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் சென்னையில் கைது!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக்கொலை; 5 தனிப்படைகள் அமைப்பு
-
ஓராண்டில் ரூ.55 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் கொள்முதல்; ஒப்புதலை விட கூடுதலாக ரூ.13,179 கோடி செலவு
-
மே தினத்தில் மதுபானம் விற்ற 19 பேர் கைது