ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக்கொலை; 5 தனிப்படைகள் அமைப்பு

28


ஈரோடு: ஈரோடு, சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



ஈரோடு, சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி ராக்கியப்பன் (75), பாக்கியம் (60) வசித்து வந்தனர். தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு தப்பியோடினர்.


மூதாட்டியிடம் இருந்த 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து விட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தம்பதியரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement