நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

4

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மே 01) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய போக்சோ




பிளஸ் 2 மாணவர் கைது

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றில், மாணவரும், மாணவியும் 2024ல் பிளஸ் 2 படித்தனர். 17 வயதான இவர்கள் நண்பர்களாக பழகினர். கடந்தாண்டு டிச., 8ல் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, தன் வீட்டிற்கு மாணவர் பலமுறை அழைத்துச் சென்று, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

அம்மாணவி நான்கு மாதம் கர்ப்பமுற்றார். மாணவியின் பெற்றோர், சிவகங்கை மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், மாணவரை கைது செய்தனர்.


சிறுமியை சீரழித்த வாலிபருக்கு 'கம்பி'



கோவையை சேர்ந்த, 12 வயது சிறுமி, தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது உறவினரான, 20 வயது வாலிபர், சிறுமி வசிக்கும் அதே பகுதியில் வசிக்கிறார். கடந்தாண்டு, மே மாதம் முதல் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன், வயிறு வலிப்பதாக, பெற்றோரிடம் அச்சிறுமி தெரிவித்தார். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்தபோது, ஒன்றரை மாதம் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்தார். பெற்றோர் அளித்த புகாரின்படி, போலீசார் போக்சோ வழக்கில் வாலிபரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

வாலிபர் தாயுடன் சிக்கினார்



விருதுநகர், யானைக்குழாய் தெருவைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் 2023ல் பணிபுரிந்தார். அங்கு டிரைவராக இருந்த, கணபதி காம்பவுண்டைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் என்பவருடன், பழக்கம் ஏற்பட்டு இரு ஆண்டுகளாக காதலித்தனர்.

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பிரேம், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமி புகாரில், பிரேம் ஆனந்த், உடந்தையாக இருந்த அவரது தாய் லட்சுமியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

Advertisement