எம்.ஜி., ஹெக்டர் 'இ - 20' மேம்பாடு

'ஹெக்டர்' எஸ்.யூ.வி., கார், 20 சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக 'ஜே.எஸ்.டபிள்யூ., எம்.ஜி.,' நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கார், 'இ - 20' சான்றிதழ் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினில் வரும் மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் வகை கார்கள், 'இ - 20' விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், ஆஸ்டர் எஸ்.யூ. வி., கார், 'இ - 20' விதிமுறைக்கு மேம்படுத்தப்பட்டது. 'ஹெக்டர்' காரின் விலை, 13.99 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.

Advertisement