ராயல் என்பீல்டு ஹன்டர் 'சாப்ட்'டான சஸ்பென்ஷன் 'ஸ்மூத்'தான பயணம்

'ராயல் என்பீல்டு' நிறுவனம், அதன் 'ஹண்டர் 350' ரோட்ஸ்டர் பைக்கை முதன் முறையாக மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் ஆரம்ப விலையில், மாற்றம் இல்லை. ஆனால், நடு மற்றும் உயர்ந்த மாடல் பைக்குகளின் விலை, 7,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் பின்புற சஸ்பென்ஷன்கள் இறுக்கமாக இருந்ததால், பெரிய குறையாக சொல்லப்பட்டது. அதனால், ஓட்டும் அனுபவத்தை மேம்படுத்த புதிய பின்புற சஸ்பென்ஷன் மற்றும் கூடுதல் குஷன் கொண்ட சீட் வழங்கப்பட்டுள்ளன.
முதல் முறையாக இந்த பைக்கில், ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 10 எம்.எம்., அதிகரிப்பு, எல்.இ.டி., லைட்டுகள், செமி அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், நேவிகேஷன் டிஸ்ப்ளே ஆகிய அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. உயர்ந்த மாடல் பைக்கில், டைப் - சி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில், அதே 349 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, ஜே - சீரிஸ் இன்ஜின் மற்றும் 5 - ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. 'ஜாவா 42', 'ஹோண்டா சி.பி., - 350' ஆகிய பைக்குகளுக்கு இந்த பைக் போட்டியாக உள்ளது.
இன்ஜின் - 349.34 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு
பவர் - 20 .1 ஹெச்.பி.,
டார்க் - 27 என்.எம்.,
மைலேஜ் - 36.2 கி.மீ.,
பெட்ரோல் டேங்க் - 13 லிட்டர்
மேலும்
-
ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக்கொலை; 5 தனிப்படைகள் அமைப்பு
-
ஓராண்டில் ரூ.55 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் கொள்முதல்; ஒப்புதலை விட கூடுதலாக ரூ.13,179 கோடி செலவு
-
மே தினத்தில் மதுபானம் விற்ற 19 பேர் கைது
-
ஆடுகள் திருடிய 2 சிறுவர்கள் கைது
-
1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
-
பல்கலை., கூட்டமைப்பு 23வது நாளாக போராட்டம்