பரமக்குடியில் வயதான கணவன், மனைவி வீட்டில் தற்கொலை; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு

1

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வயதான கணவன், மனைவி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மூன்று நாட்களுக்கு பின் உடல் அழகிய நிலையில் கண்டெடுத்துள்ளனர்.


பரமக்குடி மேல தெருவை சேர்ந்தவர் நாக சுப்பிரமணியன், 75. இவரது மனைவி தனலட்சுமி,70. இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.,27) இரவு தனது மகள் புனிதாவுடன் மொபைலில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.


பின்னர், தொடர்ந்து மூன்று நாட்களாக தொடர்பு கொள்ள முடியாத நிலையில், இன்று நேரில் வந்து புனிதா பார்த்துள்ளார். அப்போது, வீட்டுக்குள் இருந்து கதவு வழியாக ரத்தம் வந்துள்ளது. தகவலின் பேரில் டவுன் போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது இருவரும் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர்.


மேலும் அப்பகுதியினர் இருவரையும் கடைசியாக ஞாயிற்றுக்கிழமை பார்த்ததாக தெரிவித்தனர். ராமநாதபுரம் தடவியல் துறையினர் ஆய்வு செய்கின்றனர். போலீசார் கூறிய போது, மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது, என்றனர்.

Advertisement