ஆத்திரத்தை தூண்டிய பாக்., தளபதி: பரூக் அப்துல்லா கோபம்

ஸ்ரீநகர்: ''பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், இரண்டு நாடு கொள்கையை பற்றி பேசி ஆத்திரத்தை தூண்டி விட்டு உள்ளார்,'' என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல், பாதுகாப்பு தோல்வி மற்றும் உளவுத்துறை குறைபாடு என்பதில் சந்தேகம் இல்லை. எங்களது வாழ்க்கை சிறப்பாக செல்வது பாகிஸ்தானுக்கு பிடிக்கவில்லை. இதனால் தான் பாகிஸ்தான் பஹல்காம் தாக்குதலை நடத்தியது. ஆனால், இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை எப்படி பாதிக்கும் என்பதை பாகிஸ்தான் உணரவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக முஸ்லிம்கள் தொடர்பாக பல கதைகள் நடந்து வருகின்றன.
அதனை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். தற்போது, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், இரண்டு நாடு கொள்கையை பேசி ஆத்திரத்தை தூண்டி விட்டு உள்ளார். ஒரு வேளை போர் வந்தால், பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வரும். ஆனால், அதன் முடிவு கடவுளுக்கே தெரியும். இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.





மேலும்
-
சர்வதேச பயணியர் போக்குவரத்தில் பின்தங்கிய சென்னை விமான நிலையம் முன்னேற்ற பாதைக்கு செல்ல திட்டங்கள் அமலாகுமா?
-
காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி!
-
பஸ்சை நிறுத்தி தொழுகை; டிரைவர் 'சஸ்பெண்ட்'
-
பஸ் ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய ஒப்பந்தம்
-
வரும் 7ல் அக்னி வசந்த விழா துவக்கம்
-
ஸ்டூடியோவில் திருடியவரின் 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி