குவைத்தில் கத்தி குத்து காயங்களுடன் இந்திய தம்பதி மர்ம மரணம்

குவைத்:குவைத்தில் கேரளாவைச் சேர்ந்த கணவன், மனைவி கத்தி குத்து காயங்களுடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த சுராஜ் மற்றும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பின்ஸி ஆகியோர் திருமணம் செய்து கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். இருவரும் குவைத்தில் நர்ஸாக பணியாற்றி வந்தனர். குவைத் சுகாதாரத்துறையின் கீழ் உள்ள மருத்துவ மையத்தில் சுராஜூம், பாதுகாப்புத்துறையில் செவிலியராக பின்ஸியும் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில், இரவுப் பணி முடித்து வந்த இருவரும் உடலில் ரத்த காயங்களுடன் அறையில் உயிரிழந்து கிடந்துள்ளனர். காவலாளி கொடுத்த தகவலின் பேரில் போலீசார் நேரில் சென்று, உடல்களை மீட்டு விசாரித்தனர்.
இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாறி மாறி கத்தியால் குத்தி உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இருவரின் கைகளிலும் ரத்தத்துடன் கத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்
-
மதுரை வீரன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
-
பொற்பந்தல் குளம் சீரமைக்க கிராமவாசிகள் வலியுறுத்தல்
-
சாலையின் நடுவே மின் கம்பங்கள் மாற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு
-
வணிக சிலிண்டர் விலை குறைப்பு
-
தடுப்பு இல்லாத சாலை வளைவால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
-
அரவக்குறிச்சியில் ஜவகர் சிறுவர் மன்றம் தொடங்க வலியுறுத்தல்