பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு தியாகி அந்தஸ்து: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்

26

புதுடில்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கோரிக்கை விடுத்து உள்ளார்.


காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆறுதல் தெரிவித்தார். பாகிஸ்தான் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.


இந்நிலையில் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பஹல்காமில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரின் துயரத்திலும், தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும் என கோருவதற்கும் நான் ஆதரவாக உள்ளேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

Advertisement