வாக்காளர் பட்டியலுடன் இறப்பு பதிவுகள் இணைப்பு; தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்

புதுடில்லி: பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஓட்டளிக்கும் முறையை எளிமையாக்கும் விதமாக, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விபரங்கள் துல்லியமாக இருப்பதற்காக, இறந்தவர்களின் பெயரை நீக்க தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதற்காக, பிறப்பு, இறப்பு பதிவுகளை, இந்தியப் பதிவாளர் ஜெனரலிடம் இருந்து பெற்று திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இறப்பு குறித்த தகவலை சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினரிடம் மறு உறுதி செய்ய, பூத் அளவிலான அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களின் ஓட்டுச்சாவடி குறித்த விபரத்தை விரைந்து அறிந்து கொள்ள முடியும். மேலும், தேர்தல் அதிகாரிகள் ஓட்டு போடும் நபரின் பெயரை உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.

Advertisement