போபண்ணா ஜோடி ஏமாற்றம்

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் போபண்ணா ஜோடி தோல்வியடைந்தது.
ஸ்பெயினில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் போபண்ணா, அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அர்ஜென்டினாவின் கொன்சாலஸ், மால்டெனி ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை போபண்ணா ஜோடி 4-6 என இழந்தது. இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்ற போபண்ணா ஜோடி, டை பிரேக்கர் வரை சென்று 7-6 என வசப்படுத்தியது.
பின் வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது. இதில் போபண்ணா ஜோடி 9-8 என முன்னிலையில் இருந்தது. கடைசியில் அடுத்தடுத்து புள்ளிகளை இழக்க, 9-11 என நழுவவிட்டது. ஒரு மணி நேரம், 59 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 4-6, 7-6, 9-11 என போராடி தோல்வியடைந்தது.

Advertisement