இந்தியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து * சுதிர்மென் பாட்மின்டனில் ஆறுதல்

ஜியாமென்: சுதிர்மென் கோப்பை பாட்மின்டனில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இங்கிலாந்தை 3-2 என வீழ்த்தியது.
சீனாவில், அணிகளுக்கு இடையிலான சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இந்திய அணி 'டி' பிரிவில் இங்கிலாந்து, இந்தோனேஷியா, டென்மார்க் அணிகளுடன் இடம் பெற்றது. முதல் இரு போட்டியில் (டென்மார்க், இந்தோனேஷியா) தோற்ற இந்திய அணி, காலிறுதி வாய்ப்பை இழந்தது. நேற்று தனது கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது.
முதலில் நடந்த பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் அனுபமா, இங்கிலாந்தின் லின்கன் மோதினர். இதில் அனுபமா 21-12, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
அடுத்த நடந்த ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சதிஷ்குமார், இங்கிலாந்தின் ஹாரி ஹுவாங்கை சந்தித்தார். முதல் செட்டை 18-21 என இழந்த சதிஷ்குமார், அடுத்த இரு செட்டுகளை 22-20, 21-13 என வசப்படுத்தினார். முடிவில் 18-21, 22-20, 21-13 என போராடி வெற்றி பெற, இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் தனிஷா, ஷ்ருதி ஜோடி 21-17, 21-17 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் லிஜ்ஜி, எஸ்டெல்லி ஜோடியை வீழ்த்தியது. இந்திய அணி 3-0 என வெற்றியை உறுதி செய்தது.
ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் ஹரிஹரன், ரூபன் குமார் ஜோடி, இங்கிலாந்தின் ரோரி ஈஸ்டன், அலெக்ஸ் கிரீன் ஜோடியிடம் 14-21, 21-11, 13-21 என தோற்றது.
கடைசியாக நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சதிஷ்குமார், தனிஷா ஜோடி, 21-11, 13-21, 22-24 என இங்கிலாந்தின் ஹெம்மிங், லீயுவன் ஜோடியிடம் வீழ்ந்தது. இருப்பினும் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது.
மேலும்
-
ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக்கொலை; 5 தனிப்படைகள் அமைப்பு
-
ஓராண்டில் ரூ.55 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் கொள்முதல்; ஒப்புதலை விட கூடுதலாக ரூ.13,179 கோடி செலவு
-
மே தினத்தில் மதுபானம் விற்ற 19 பேர் கைது
-
ஆடுகள் திருடிய 2 சிறுவர்கள் கைது
-
1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
-
பல்கலை., கூட்டமைப்பு 23வது நாளாக போராட்டம்