வணிக சிலிண்டர் விலை குறைப்பு
சென்னை:தமிழகத்தில் இம்மாதம், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படாமல், 868.50 ரூபாய்க்கே வழங்கப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, 15.50 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.
பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும், சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் மாதத்தின் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.
தமிழகத்தில் ஏப்ரல், 1ல் வீட்டு சிலிண்டர் விலை, 818.50 ரூபாயாகவும், வணிக சிலிண்டர் விலை, 1,921.50 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
திடீரென ஏப்ரல், 8ம் தேதி, நாடு முழுதும் வீட்டு சிலிண்டர் விலை, 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில், 868.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இம்மாதம், வீட்டு சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படாமல், 868.50 ரூபாயாகவே உள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தில் வணிக சிலிண்டர் விலை, இம்மாதம், 15.50 ரூபாய் குறைக்கப்பட்டு 1,906 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்
-
இனியும் முதல்வர் மூடி மறைப்பது நல்லதுக்கில்லை; எச்சரிக்கும் அண்ணாமலை
-
பல்லடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்ட வங்கதேச ஆசாமி; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!
-
காஷ்மீர் தாக்குதல்: ஐ.எஸ்.ஐ., லஷ்கர் பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்
-
பா.ஜ.,வுடன் கூட்டணி சேர இ.பி.எஸ்., இடம் வலியுறுத்தினேன்: அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு நிர்வாகி பேச்சு
-
பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு; அடித்து சொல்கிறது அமெரிக்கா!
-
பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஒப்புக்கொண்டார் பிலாவல் புட்டோ