பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஒப்புக்கொண்டார் பிலாவல் புட்டோ

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்ததை, அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ ஒப்புக்கொண்டார்.
பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், சமீபத்தில் அளித்த பேட்டியில் பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருந்தது என்றும், நிதியுதவி அளித்ததையும் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், முன்னாள் வெளியுறவு அமைச்சரும், பெனாசிட் புட்டோவின் மகனுமான பிலாவல் புட்டோ பேட்டியில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தது என்பதில் ரகசியம் எதுவும் கிடையாது. அந்த தொடர்பின் காரணமாகவே பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அப்படி பாதிக்கப்பட்டதால் நாங்கள் பாடங்களை கற்றுக் கொண்டோம். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண சீர்திருத்தமும் செய்தோம். பயங்கரவாதம் எங்கள் நாட்டின் துரதிர்ஷ்டமான வரலாறு.
இவ்வாறு அந்த பேட்டியில் கூறினார்.
நேற்று மாலை மிர்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 'பாகிஸ்தான் அமைதியான நாடு. இஸ்லாம் அமைதியான மதம். நாங்கள் போரை விரும்பவில்லை' என்று பேசினார்.










மேலும்
-
வீரர்களுக்கு உதவும் நவீன தொழில்நுட்பம் * ரவி சாஸ்திரி பெருமிதம்
-
பிராட்மேன் போல பும்ரா * கில்கிறிஸ்ட் பாராட்டு
-
சிறந்த கால்பந்து வீரர் சுபாஷிஷ்
-
இங்கிலாந்து அணி அறிவிப்பு
-
இந்தோனேஷியாவில் 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை: தலையிட மத்திய அரசுக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு
-
யுபிஎஸ்சி தேர்வில் போலி சான்றிதழ்: மாஜி ஐஏஎஸ் அதிகாரியிடம் போலீஸ் விசாரணை