ரூ.20.60 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்



கரூர்கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் சாலைப்புதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடக்கிறது. இங்கு கரூர் மற்றும் க.பரமத்தி ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள் நிலக்கடலைகளை ஏலத்துக்கு கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 938 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.


ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 61.70 ரூபாய், அதிகபட்சமாக, 71.60 ரூபாய், சராசரியாக, 68.80 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 30,882 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 20 லட்சத்து, 60 ஆயிரத்து, 388 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement