போனில் தலாக் கூறிய கணவர்; உ.பி.,யில் மனைவி தற்கொலை

கோரக்பூர் : உத்தர பிரதேசத்தில், போனில் மூன்று முறை 'தலாக்' என கணவர் கூறி விவாகரத்து செய்ததால், மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
உ.பி.,யைச் சேர்ந்த சானியா என்ற இளம்பெண்ணுக்கும், மஹாராஷ்டிராவில் வேலை பார்க்கும் சலாவுதீன் என்பவருக்கும், 2023 ஆகஸ்டில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பேசியபடி, சானியாவின் பெற்றோர் வரதட்சணை மற்றும் சீர் பொருட்களை கணவர் குடும்பத்திற்கு வழங்கினர்.
அது போதாது என கூறி, சலாவுதீனின் சகோதரியர் மூவர் மற்றும் தாய் தொடர்ந்து பலமுறை சானியாவை தொந்தரவு செய்து வந்தனர். இதுகுறித்து, போலீசில் அந்த பெண் புகார் கூறினார். அவரது வீட்டுக்கு சென்று விசாரித்த எஸ்.ஐ., ஜெய்பிரகாஷ் சிங், வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை.
இந்நிலையில், தாய் வீட்டில் இருந்த மனைவி சானியாவை, சமீபத்தில் போனில் அழைத்த சலாவுதீன், நீண்ட நேரம் பேசிய பின், மனைவியிடம் மூன்று முறை 'தலாக்' என கூறி, விவாகரத்து செய்வதாக தெரிவித்தார். இதனால் மனமுடைந்த சானியா அன்று இரவே வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரம் குறித்து அறிந்த எஸ்.பி., கவுரவ் குரோவர், புகார் தெரிவித்தும், வழக்கு பதிவு செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக கூறி, எஸ்.ஐ., ஜெய்பிரகாஷ் சிங்கை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண்கள், மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை சட்டவிரோதம் என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, முத்தலாக்கிற்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவும் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதன் வாயிலாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும்
-
இனியும் முதல்வர் மூடி மறைப்பது நல்லதுக்கில்லை; எச்சரிக்கும் அண்ணாமலை
-
பல்லடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்ட வங்கதேச ஆசாமி; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!
-
காஷ்மீர் தாக்குதல்: ஐ.எஸ்.ஐ., லஷ்கர் பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்
-
பா.ஜ.,வுடன் கூட்டணி சேர இ.பி.எஸ்., இடம் வலியுறுத்தினேன்: அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு நிர்வாகி பேச்சு
-
பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு; அடித்து சொல்கிறது அமெரிக்கா!
-
பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஒப்புக்கொண்டார் பிலாவல் புட்டோ