அரையிறுதியில் இந்திய ஜோடி

லொபோட்டா: ஐ.டி.எப்., டென்னிஸ் அரையிறுதிக்கு இந்தியாவின் ராஷ்மிகா, ருடுஜா ஜோடிகள் முன்னேறின.
ஜார்ஜியாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா ஜோடி, ரஷ்யாவின் வார்வரா பான்ஷினா, டேரியா ஜோடியை எதிர் கொண்டது. ராஷ்மிகா ஜோடி 6-3, 3-6, 10-8 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ருடுஜா போசாலே, பெய்ஜ் மேரி ஜோடி, அமெரிக்காவின் கெயட்டனோ, வடக்கு மரியானா தீவின் கரோல் லீ ஜோடியை சந்தித்தது. ருடுஜா ஜோடி 6-7, 6-3, 10-8 என போராடி வென்றது.

Advertisement