என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி

14


சென்னை: சென்னையில் நடந்த அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதினம், ''என்னை கொலை செய்ய சதி முயற்சி நடக்கிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் என்னைக் காப்பாற்றினார்'' என குறிப்பிட்டார்.


திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம், அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், எஸ்.ஆர்.எம்., பல்கலை தமிழ்ப்பேராயம் ஆகியவை இணைந்து நடத்தும், ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலையில், இன்று (மே 03) துவங்கியது.


Tamil News
Tamil News
3 நாட்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் இன்று மத்திய அமைச்சர் நட்டா, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில், நேற்று விபத்தில் சிக்கி உயிர் தப்பியதை சுட்டிக்காட்டி, மதுரை ஆதினம் பேசியதாவது:


பொல்லாப்பயலுக. அப்பா, இந்த தொலைக்காட்சி, ஒன்று என்றால் ரெண்டு என்கின்றனர். நேற்று கூட ஒரு சம்பவம் நடந்து விட்டது. என்னை கொலை செய்ய சதி செய்து விட்டனர். தருமை ஆதினம் ஆசி தான் என்னை காப்பற்றியது.





மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெருமான் தான் என்னை காப்பாற்றினார். இன்று இந்த இடத்திலே நிப்பேனா என்ற அளவுக்கு நேற்று ஆகி விட்டது. அவ்வளவு துாரம் நடந்து விட்டது. நல்ல காரியத்தை பேச முடியவில்லை ஐயா. இவ்வாறு மதுரை ஆதினம் பேசினார்.


மனிதாபிமானம்; நட்டா பேச்சு!



மாநாட்டில் நட்டா பேசியதாவது: வாழ்க தமிழ், வளர்க தமிழகம். ஆன்மிகம் மட்டுமின்றி சமூக சேவையிலும் தருமபுரம் ஆதினம் ஈடுபட்டு வருவது பாராட்டத்தக்கது. மனிதாபிமானத்தை சைவ சித்தாந்தம் வலியுறுத்துகிறது.



தேவாரம், திருவாசகம் தற்போதும் உணர்வுப்பூர்வமாக பாடப்படுகிறது. பாரம்பரிய சைவ சித்தாந்தம் பின்பற்றும் சைவ ஆதினம் பற்றி நான் அறிவேன். சைவ சித்தாந்தத்திற்கு தமிழகம் சிறந்த மண். இவ்வாறு அவர் பேசினார்.



கவர்னர் ரவி பேச்சு




''சைவ சித்தாந்தம் தமிழுக்கு அடையாளம். சைவ சித்தாந்தத்தில் சமுதாய வேறுபாடு கிடையாது. சனாதன தர்மமே ஆன்மிகத்தின் அடையாளம். அனைவரும் ஒன்று என சனாதனம் கூறுகிறது.


பக்தி நிலையிலேயே சிவனை அடைய முடியும். பக்தி தான் ஆன்மிகத்தை காப்பாற்றுகிறது'' என மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில் தெரிவித்தார்.

Advertisement