இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன்: ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் சாம் குக், ஜோர்டான் காக்ஸ் இடம் பெற்றனர்.

இங்கிலாந்து வரவுள்ள ஜிம்பாப்வே அணி, ஒரே ஒரு டெஸ்டில் பங்கேற்கிறது. இப்போட்டி, வரும் மே 22ல் நாட்டிங்காமில் துவங்குகிறது. ஜிம்பாப்வே அணி 22 ஆண்டுகளுக்கு பின், இங்கிலாந்து மண்ணில் டெஸ்டில் விளையாடுகிறது. கடைசியாக 2003ல் பங்கேற்றது. இப்போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.
கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் தொடர்கிறார். வேகப்பந்துவீச்சாளர் சாம் குக், 'விக்கெட் கீப்பர்-பேட்டர்' ஜோர்டான் காக்ஸ் என, இரண்டு புதுமுக வீரர்கள் தேர்வாகினர். கடந்த 2023ல் ஆஷஸ் தொடரில் பங்கேற்ற வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் டங், மீண்டும் அணிக்கு திரும்பினார்.


இங்கிலாந்து அணி: ஸ்டோக்ஸ் (கேப்டன்), அட்கின்சன், சோயிப் பஷிர், ஹாரி புரூக், சாம் குக், ஜோர்டான் காக்ஸ், ஜாக் கிராலே, பென் டக்கெட், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்.

Advertisement