நீட் தேர்வர்களுக்கான ஆடை குறியீடுகள், அணியக்கூடாத ஆபரணங்கள்; வழிகாட்டுதல்கள் வெளியீடு

புதுடில்லி: நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நாளை (மே 4) நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 23 லட்சம் பேரும், தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும் தேர்வை எதிர்கொள்ள இருக்கின்றனர். தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது.
இந் நிலையில் தேர்வர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;
* தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (hall ticket) https://neet.nta.nic.in/ என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிரமங்கள் என்றால் 011 40759000 அல்லது 011 69227700 என்ற தொலைபேசி எண்கள், neetug2025@nta.ac.in என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
* தேர்வு நாளன்று, தேர்வர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தேர்வு நேர அட்டவணையை பின்பற்ற வேண்டும். சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு வருவது அவசியம்.
•ஆண் தேர்வர்கள் பாதுகாப்பு மற்றும் சோதனை நடைமுறைகளுக்கு ஏற்ப எளிமையான, வசதியான ஆடைகளை அணிய வேண்டும். தேவையற்ற தாமதங்கள், தகுதியிழப்புக்கு வழிவகுக்கும் எந்த ஆடை அல்லது ஆபரணங்களை தவிர்க்க வேண்டும்.
ஆண் தேர்வர்களுக்கான அனுமதிக்கப்பட்ட ஆடை நடைமுறைகள்;
* வெளிர்நிற அரைக்கை சட்டைகள், டி சர்ட்டுகள்(பெரிய பொத்தான்கள்,எம்பிராய்டரி கூடாது)
* எளிமையான கால் சட்டைகள்
* மெல்லிய காலணிகள்
ஆண் தேர்வர்களுக்கான அனுமதிக்கப்படாத ஆடை நடைமுறைகள்;
* முழு கைச்சட்டைகள் அணியக்கூடாது
* பெரிய பொத்தான்கள் கொண்ட பைகள், ஆடைகள்
•ஷுக்கள்
•கடிகாரங்கள், வளையல்கள்,சங்கிலிகள், குளிர் கண்ணாடிகள்(சன் கிளாஸ்) போன்ற எந்த ஆபரணங்கள்
பெண் தேர்வர்களுக்கான ஆடை நடைமுறைகள்;
* ஆபரணங்கள், அலங்காரங்கள் இல்லாமல் லேசான, எளிய மற்றும் வசதியான ஆடைகளை அணிந்து வர வேண்டும்.
* விரிவான வடிவமைப்புகள் இல்லாத வெளிர் நிற அரைக்கை குர்திகள்
•சல்வார் அல்லது பேண்ட்
•செருப்புகள் அல்லது குறைந்த உயரம் கொண்ட ஹீல்ஸ் செருப்புகள்
பெண் தேர்வர்களுக்கான அனுமதிக்கப்படாத ஆடை நடைமுறைகள்;
* முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி வடிவம் கொண்டவை
•ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பரமான ஆபரணங்கள்
•நகைகள்(காதணிகள், மூக்குத்திகள், சங்கிலிகள், வளையல்கள், மோதிரங்கள், கொலுசுகள்)
* அதிக உயரம் கொண்ட (high) ஹீல்ஸ், ஷூக்கள், மூடிய நிலையில் வடிவமைக்கப்பட்ட காலணிகள்
தேர்வுக்கூட அறையில் தேர்வர்கள் கொண்டு செல்லவேண்டிய மற்றும் அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத பொருட்கள் என்ன என்ற விவரத்தையும் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
* பாஸ்போர்ட் அளவில் புகைப்படத்துடன் கூடிய தேர்வுக்கூட அனுமதி சீட்டு நகல் (விண்ணப்ப படிவத்தின் போது பதிவேற்றப்பட்டது போல இருத்தல் கட்டாயம்)
* வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்கு ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் பதிவேற்றியது போன்றது)
•அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஒன்று
•பால்பாயிண்ட் பேனா(நீலம்/கருப்பு)
* முகக்கவசம் மற்றும் சானிடைசர் (சிறிய பாட்டில்)
அனுமதிக்கப்படாத பொருட்கள்;
*மொபைல்போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள், கால்குலேட்டர்கள், ப்ளூடூத் சாதனங்கள்
•எழுது பொருட்கள்(அனுமதிக்கப்பட்ட பேனாவை தவிர)
•பணப்பைகள், கைப்பைகள், குளிர் கண்ணாடிகள்(சன் கிளாஸ்)
•சாப்பிடக்கூடிய பொருட்கள், அடைத்து வைக்கப்பட்ட உணவு அல்லது பானங்கள் ( மருத்துவ உபாதைகள் உள்ளவர்களை தவிர)
* அச்சிடப்பட்ட, கையால் எழுதப்பட்ட குறிப்புகள், துண்டுச்சீட்டுகள்
தேர்வர்கள் சரிபார்ப்பு, சோதனை நடைமுறைகளை முடிக்க ஏதுவாக முற்பகல் 11 மணிக்குள் தேர்வு மையத்தை அடைய வேண்டும். முன்னதாக சோதனை மற்றும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு செய்யப்படும். மதியம் 1.30 மணிக்கு பின்னர் தேர்வு மையம் உள்ளே அனுமதி இல்லை.









மேலும்
-
பாலம் கட்டுமானப் பணியின் போது கிரேன் சரிந்து விபத்து; 3 தொழிலாளர்கள் பலி
-
மலையாள மண்ணில் லஞ்சம், ஊழலை வேரறுக்கும் 'மதுரையின் மருமகன்'
-
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கேரள கோர்ட் தீர்ப்பு
-
திட்டமிட்டு காரில் மோதிய வாலிபர்; ராமநாதபுரத்தில் 12 பேர் காயம்
-
பைனலில் இந்திய ஜோடி * யூத் டேபிள் டென்னிசில்...
-
பாகிஸ்தான் தோல்வியடைந்த நாடு: ஓவைஸி சாடல்