சிறந்த கால்பந்து வீரர் சுபாஷிஷ்

புவனேஸ்வர்: சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை இந்தியாவின் சுபாஷிஷ் போஸ் வென்றார்.
அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் சிறந்த வீரருக்கான விருதை சுபாஷிஷ் போஸ் கைப்பற்றினார். கோல்கட்டாவை சேர்ந்த தற்காப்பு வீரரான இவர், இந்தியாவுக்காக 42 போட்டியில் பங்கேற்றுள்ளார். இவரது தலைமையிலான மோகன் பகான் அணி, இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) 11வது சீசனில் (2024-25) கோப்பை வென்றது. தவிர, லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து ஐ.எஸ்.எல்., ஷீல்டு வென்றது.
சிறந்த வீராங்கனைக்கான விருதை ஈஸ்ட் பெங்கால் அணியின் சவுமியா தட்டிச் சென்றார். தெலுங்கானாவை சேர்ந்த மத்தியகள வீராங்கனையான இவர், இந்தியாவுக்காக 33 போட்டியில் களமிறங்கினார்.
சிறந்த கோல்கீப்பருக்கான விருதை ஹிமாச்சல பிரதேசத்தின் விஷால் கைத் கைப்பற்றினார். இவர், ஐ.எஸ்.எல்., 11வது சீசனில் சிறந்த கோல்கீப்பராக தேர்வாகினார். பெண்கள் பிரிவில் சிறந்த கோல்கீப்பராக மணிப்பூரின் பந்தோய் சானு கைப்பற்றினார்.
சிறந்த நம்பிக்கைக்குரிய வீரராக கோவாவின் பிரிசான் பெர்ணான்டஸ், வீராங்கனையாக மணிப்பூரின் தோய்பிசானா சானு தேர்வாகினர்.
மேலும்
-
என்னை கொலை செய்ய சதி; மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார்: மதுரை ஆதினம் அதிர்ச்சி
-
பாக்.,கில் இருந்து பொருள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை!
-
போப் தோற்றத்துடன் அதிபர் டிரம்ப் படம் வெளியீடு; சமூக வலைதளத்தில் வைரல்!
-
சென்னையில் தொடங்கியது பா.ஜ., மையக்குழு கூட்டம்; நட்டா தலைமையில் ஆலோசனை!
-
மதுரையில் ஜூன் 1ல் கூடுகிறது தி.மு.க., பொதுக்குழு!
-
தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கை நிறுத்த அரசு திட்டமா; ராமதாஸ் கேள்வி