பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!

9


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்த நிலையில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. பயப்படாமல் இருப்பது போல் காட்டிக் கொள்ளவும், உள்நாட்டு மக்களை ஏமாற்றவும், இந்த சோதனையை நடத்தியுள்ளது அந்நாட்டு ராணுவம்.


பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் காரணம் என்பது என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதியாகிவிட்டது. பாகிஸ்தான் உடன் அனைத்து உறவுகளையும் இந்தியா முறித்து கொண்டது. இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.



அதே நேரத்தில் எல்லை ப்பகுதியில் இரவு நேரங்களில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் இன்று பாகிஸ்தானில் இந்தியாவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


இதனால் பயத்தில் இருக்கும் பாகிஸ்தான் இன்று ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. 450 கி.மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் அப்தாலி ஆயுத அமைப்பின் ஏவுகணையை ஏவி பாகிஸ்தான் சோதனை நடத்தி உள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.



அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. பாகிஸ்தானின் ஏவுகணை சோதனை எல்லாம் சும்மாங்க... சரியான நேரத்தில் இந்தியா சொல்லி அடிக்கும் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்தினருக்கு முழு சுதந்திரத்தையும் மத்திய அரசு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நுழைய தடை!



பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் இந்திய துறைமுகத்திற்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களும் பாகிஸ்தானிற்குள் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement