ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது

17


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.


ராஜஸ்தான் மாநிலத்தில், நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, அஜ்மீரில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், சட்ட விரோதமாக வசித்து வருவதாக 2 ஆயிரத்தை மேற்பட்டோரை அடையாளம் கண்டனர்.

அவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டதை அடுத்து, சட்டவிரோதமாக வசித்து வந்ததாக, வங்கதேசத்தினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன் லால் சர்மாவின் அறிவுறுத்தல்களின் படி, சட்டவிரோத வங்கதேச நாட்டவர்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.



மாநிலத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேச நாட்டினரை நாடு கடத்துமாறு முதல்வர் பஜன்லால் சர்மா அதிரடி உத்தரவிட்டார். அதன் படி, அதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

Advertisement