ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: சைவ சித்தாந்த மாநாட்டில் ஜே.பி.நட்டா பேச்சு

1

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற முடியும் என்பதை அறியமுடிந்த மாநாடு என்று பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறினார்.

பா.ஜ., தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு சென்னை வந்தார்.இதைத்தொடர்ந்து இன்று காலை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் விடுதியில், ஜெ.பி.நட்டா தலைமையில் தமிழ்நாடு பாஜகவின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் 20 மாவட்டத்தை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

அதை தொடர்ந்து, ஜெ.பி. நட்டா இன்று சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.


ஜே.பி., நட்டா பேசியதாவது:

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற முடியும் என்பதற்கான சக்திவாய்ந்த நினைவூட்டலாக இந்த மாநாடு உள்ளது. இது உண்மையான கல்வி அறிவியல், ஆன்மிகம் மற்றும் சேவையின் ஒருங்கிணைப்பில் வேரூன்றியுள்ளது. இத்தகைய அர்த்தமுள்ள மற்றும் நுண்ணறிவுள்ள மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தருமபுரம் ஆதினங்கள் மற்றும் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தை நான் பாராட்டுகிறேன். சைவ சித்தாந்தத்தின் காலத்தால் அழியாத போதனைகள் உலகை அவற்றின் நித்ய ஞானத்தால் தொடர்ந்து ஒளிரச் செய்யட்டும்.

இவ்வாறு ஜே.பி. நட்டா பேசினார்.

Advertisement