ஒரே மரத்தில் ஏராளமான தேன் கூடு: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

கூடலுார்:
முதுமலை, மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் ஒரே மரத்தில், தேனீக்கள் கட்டியுள்ள ஏராளமான தேன் கூடுகள் சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கூடலுார் மற்றும் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் தேனீக்கள் சீசன் துவங்கியுள்ளது. வனங்களில் உள்ள குறிப்பிட்ட வகையான மரங்கள் மற்றும் பாறைகளில் தேனீக்கள் அதிக அளவில் கூடுகளை கட்டி உள்ளது. இவற்றை பழங்குடியினர் சேகரித்து விற்பனை செய்கின்றனர். வனங்களில் கிடைக்கும் தேனில் அதிக மருத்துவ குணம் உள்ளதால் மக்களிடையேவரவேற்பு உள்ளது.

இந்நிலையில், தற்போது முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம், ஒரே மரத்தில் ஏராளமான தேனீக்கள் கூடுகள் கட்டியுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் வியர்ந்து ரசித்து செல்கின்றனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'சாலையோரத்தில் குறிப்பிட்ட மரங்களில் சீசன் காலங்களில் தேனீக்கள் கூடு கட்டுவது வழக்கமாக நடந்து வருகிறது.

இவைகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது. சுற்றுலா பயணிகள் அப்பகுதியை எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டும்,' என்றனர்.

Advertisement