பந்தலுார் பகுதியில் நாட்டு மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு

பந்தலுார்:
பந்தலுார் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் ஊறுகாய் போட பயன்படும் வடு மாங்காய், கிளிமூக்கு, நாட்டு மாங்காய் ஆகிய வகைகள் விளைகின்றன.

அதில், வடு மாங்காய் தனியார் தோட்டங்களில் உயரமான மரங்களில் வளர்வதால், இதனை பறிக்க கேரளாவில் இருந்து அனுபவமிக்க நபர்கள் வருகின்றனர். வனப்பகுதியில் வடு மாங்காய் பழுத்தவுடன் பறவைகள் மற்றும் யானை, மான் போன்ற வனவிலங்குகள் உட்கொள்வதால், அதனை பறிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர். மற்ற ரக மாங்காய் நடப்பு ஆண்டு அதிகளவில் காய்த்துள்ளது. இவைகள் பழுத்தால் பறவைகளுக்கு விருப்ப உணவாக அமைந்துள்ளது. மேலும், ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள் பயன்படுத்தாத நிலையில், மக்கள் விரும்பி உட் கொண்டு வருகின்றனர்.

Advertisement