சாலையோரத்தில் உள்ள பழைய வாகனங்களை அகற்ற வலியுறுத்தல்

குன்னுார்:
குன்னுார் பகுதிகளில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழையவாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், ஏராளமான பழைய வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற நகராட்சிகூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு தீர்வு காண, போலீசாரின் ஒத்துழைப்புடன், நடவடிக்கை எடுப்பதாக கமிஷனரும் உறுதியளித்து உள்ளார்.

எனினும், டி.டி.கே., சாலை, வண்ணாரப்பேட்டை சாலை, டென்ட் ஹில், கான்வென்ட் ரோடு உட்பட பல இடங்களிலும் வாகனங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விஷ ஜந்துக்கள் அதிகரித்துள்ளது. சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்களில் சமூக விரோத செயல்களும் நடந்து வருவதால், இதற்கு தீர்வு காண வேண்டும்.

Advertisement