சிவகங்கையில் சூறாவளி காற்று இடி, மின்னலுடன் பலத்த மழை  மரங்கள், மின்கம்பம் சாய்ந்தன 

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று மதியம் பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்ததால், மரங்கள் சாய்ந்து மின்வெட்டு ஏற்பட்டது.

சிவகங்கையில் நேற்று மதியம் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று மதியம் 2:40 மணிக்கு நகர் மற்றும் அல்லுார், காஞ்சிரங்கால், கொட்டகுடி உள்ளிட்ட கிராமங்களில் பலத்த காற்று வீசியது. பலத்த சத்தத்துடன் மின்னலுடன் இடி சத்தம் கேட்டது. முத்துநகர், மேலுார் பைபாஸ் உள்ளிட்ட பகுதியில் மரங்கள் மின்கம்பங்களில் விழுந்தது. அல்லுாரில் பழமையான ஆலமரம் விழுந்தது. மரங்கள் விழுந்ததில், மின் கம்பங்களில் கம்பி அறுந்து மின்சாதனங்கள் சேதமானது. இதனால் சிவகங்கை நகர், அல்லுார், பனங்காடி, முத்துநகர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் ஒவ்வொரு இடத்தையும் பார்த்து மின் வினியோகத்தை சீரமைத்தனர்.

Advertisement