பைனலில் இந்திய ஜோடி * யூத் டேபிள் டென்னிசில்...

பாங்காங்க்: யூத் டேபிள் டென்னிஸ் பெண்கள், ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியா முன்னேறியது.
தாய்லாந்தில் யூத் ஸ்டார் டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் (19 வயது) பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சின்ட்ரல்லா, திவ்யான்ஷி ஜோடி, தென் கொரியாவின் யெரின், நாகுயின் ஜோடியை சந்தித்தது. இதன் முதல் இரு செட்டை 4-11, 8-11 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த மூன்று செட்டையும் (11-3, 11-9, 11-9) என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 3-2 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் அன்குர் பட்டாச்சார்ஜீ, அபினாத் ஜோடி, ஜப்பானின் கசுகி, ஈரானின் பென்யமின் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 3-2 என (8-11, 11-13, 14-12, 11-7, 11-4) வென்று, பைனலுக்குள் நுழைந்தது.
15 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் ரியானா, அனன்யா ஜோடி 3-2 என (5-11, 13-11, 9-11, 11-7, 11-8) ஹாங்காங்கின் பாங் கியு, இயுங் லாம் ஜோடியை வீழ்த்தியது.