பாலம் கட்டுமானப் பணியின் போது கிரேன் சரிந்து விபத்து; 3 தொழிலாளர்கள் பலி

1

கட்டாக்: ஒடிசாவில் பாலம் கட்டுமானப் பணியின் போது கிரேன் சரிந்து விழந்த விபத்தில் 3 தொழிலாளிகள் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கட்டாக்கில் உள்ள கான் நகர் பகுதியில் இருக்கும் ஆற்றின் குறுக்கே, பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், ராட்சத கிரேன் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும், சில சிமென்ட் ஸ்லேப்களும் சரிந்து விழுந்தது. இதில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கினர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டனர். அதில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.

Advertisement